உள்ளூர் செய்திகள்

மருத்துவ பேராசிரியர்கள் 43 பேர் ஊதியமின்றி தவிப்பு!

தேனி: மாநில கணக்காயர் அலுவலக (ஆடிட்டர் ஜெனரல் ஆபீஸ்) ஒப்புதல் கிடைக்காததால் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடப்பு மாத ஊதியம் பெறாமல் 43 பேராசிரியர்கள் தவித்து வருகின்றனர்.இம்மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 210 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். இதில் 43 பேர் பணம் வழங்கும் அதிகாரத்திற்கான தகுதி பெற்றவர்களாக உள்ளனர். உதாரணத்திற்கு மருத்துவக்கல்லுாரி முதல்வர், துறைத் தலைவர்கள், சீனியர் நிலைய மருத்துவர்கள், கண்காணிப்பாளர்கள் இதில் அடங்குவர். இந்நிலையில் மாவட்ட கருவூலத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத அலுவலர்கள் என்பதால் இவர்களுக்கு நடப்பு மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கவில்லை.ஒவ்வொரு டாக்டர்களும் குறைந்த பட்சம் தங்களது தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 வரை ஊதியம் பெறுகின்றனர். பண்டிகை காலம் என்ப தால் டாக்டர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் பிற பணிகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கருவூலத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட கருவூலத்தின் கட்டுப்பாட்டில், தானே பணம் வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க எங்களுக்கு ஒப்புதல் கிடையாது.அது மாநில கணக்காயர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்து ஊதியம் வழங்க ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே வழங்கப்படும். இத்தகவலை மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளோம். விரைவில் ஊதியம் வழங்க ஒப்புதல் கிடைத்துவிடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்