உள்ளூர் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.,யில் 46 சதவீத மாணவர்களுக்கு வேலை

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கேட்டு 1090 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இந்த கல்வியாண்டில் டிசம்பர் 2ம் தேதி கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கிய போது நிலைமை நன்றாக இருந்தது. பல முக்கிய நிறுவனங்கள் பல மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்தனர். ஆனாலும் ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி 46 சதவீதம் அளவுக்கே மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.   தற்போது  கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைச் சேர்ந்த 80 சதவீத மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு ஆணைகளைப் பெற்றுள்ளனர். டியூயல் டிகிரி படிக்கும் மாணவர்களில் 75 சதவீதம் பேரும் மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களில் 65 சதவீதம் பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்