பேராசிரியைக்கு தொல்லை 5 பேராசிரியர் மீது வழக்கு
பெங்களூரு: பெங்களூரு பல்கலையில் பணியாற்றிய பேராசிரியைக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐந்து பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது.பெங்களூரு, ஞானபாரதியில் பெங்களூரு பல்கலை உள்ளது. இங்கு, சமூகவியல் துறையில் 45 வயது பெண், ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியையாக பணியாற்றினார்.இவர், சமூகவியல் துறை பேராசிரியர் ராமஞ்சநேயா, மற்ற துறைகளின் பேராசிரியர்கள் ஸ்வரூப் குமார், ரங்கசாமி, ஜெகநாத், சிவராம் ஆகிய ஐந்து பேரும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 17ம் தேதி ஞானபாரதி போலீசில் புகார் செய்தார். புகாரின்படி, ஐந்து பேராசிரியர்கள் மீதும் வழக்கு பதிவானது.இதற்கிடையில், குற்றச்சாட்டுக்கு ஆளான ஐந்து பேராசிரியர்களும் மது குடித்தபடி காரில் பயணம் செய்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.