உள்ளூர் செய்திகள்

ஐ.டி., துறையில் 5 லட்சம் வேலைவாய்ப்பு

திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில், ஸ்ரீசண்முகா இன்ஜினியரிங் கல்லூரி திறப்பு விழா, முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் சண்முகம், துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் காளியம்மாள், அபிநயா ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் பங்கேற்று, கல்லூரியை துவக்கி வைத்தார். கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் கருணாகரன் நூலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: உயர்கல்வித் துறையில், கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. தரக்குறைவான கல்விக்கு எதிரான தற்காப்பை கையாள வேண்டியுள்ளது. வெறும் பாடங்களை கற்றுக்கொடுப்பதோடு மட்டும் ஆசிரியர்கள் பணி நிறைவடைவதில்லை. ஆராய்ச்சியில் ஈடுபட செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து, 50 ஆயிரம் இன்ஜினியர்கள் உருவாகின்றனர். நேஷனல் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளபடி, 2022ல் சிவில், ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங், ஹெல்த்கேர் மற்றும் பலமுனை தொழில் நுட்பத்துறை உள்ளிட்ட, 21 முக்கிய துறைகளில், 2 கோடியே 44 லட்சம் இன்ஜினியர்கள் தேவைப்படுவர். அதுபோல், ஐ.டி., டெலிகாம், பேங்கிங், ஹெல்த்கேர் ஆகிய துறைகளில், 2011-12ம் ஆண்டில், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்