உள்ளூர் செய்திகள்

காத்திருந்து... காத்திருந்து... 55 வயதில் ஆசிரியை பணி

இவர் தற்போது அனகாபுத்தூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். சொந்த ஊர் தூத்துக்குடி. தென்காசியில் பள்ளி படிப்பையும், தூத்துக்குடியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். கடந்த 1981ம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி திட் டத்தில் பி.எட்., பட்டம் பெற்றார். கடந்த 1984ம் ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந் தாலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நாளில் இருந்து சாவித்திரி அரசு பள்ளியில் ஆசிரியை வேலையையும் எதிர்பார்த்து காத்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு 24 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. கடந்த 2007ம் ஆண்டு, இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பணிக்கான நேர்முக தேர்வுக்கான அழைப்பு சாவித்திரிக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேக்டலின் சாவித்திரி, அனகாபுத்தூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 55. வரும் 2011ம் ஆண்டு மே மாதம் அவர் பணி ஓய்வு பெற உள்ளார். மொத்தம் 3 ஆண்டுகள் 3 மாதம் மட்டுமே அரசு பள்ளியில் அவர் பணியாற்றுவார். இதுகுறித்து, ஆசிரியை மேக்டலின் சாவித்திரி கூறுகையில், ‘செங்குன்றத்தில் வசித்து வருகிறேன். கணவர் அரசு பள்ளி ஆசிரியர். நான் பி.எட்., முடித்த பின், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தேன். ஒரே பள்ளியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்தேன். பொதுவாக, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், படித்த பெற்றோர்களை பெற்றிருப்பர்; வசதியான வீட்டு குழந்தைகளாகவும் இருப்பர். அரசு பள்ளியில் தான் ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் படிக்கின்றனர். இதனால், ஒரு சில ஆண்டுகளாவது அரசு பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. இதனால் தான் தவறாது வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, என் பதிவை புதுப்பித்து வந்தேன். அதன் பலனாக கடந்த ஆண்டு பணி கிடைத்தது’ என்கிறார் பெருமையாக...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்