உள்ளூர் செய்திகள்

விதிமுறைகளை கடைபிடிக்காத 58 சத்துணவு மைய பொறுப்பாளர்கள் சஸ்பென்ட்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விதிமுறைகளை கடைபிடிக்காத, 58 சத்துணவு மைய பொறுப்பாளர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், சத்துணவு மையங்களில் உணவு சுத்தம் மற்றும் சுகாதாரத்தைக் கண்டறிய, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் சத்துணவு மையங்களை, ஆய்வு செய்தனர். இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சம்பத் தலைமையில் நடந்தது. திட்ட இயக்குனர் ராதா முன்னிலை வகித்தார். அக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், விதிமுறைகளை கடைபிடிக்காத, 58 சத்துணவு மையங்களின் பொறுப்பாளர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்