உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு; 6 மையங்களில் 3360 பேர் எழுதுகின்றனர்

திண்டுக்கல்: மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு (மே 3) நடக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் 3360 பேர் தேர்வை எழுதுகின்றனர்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று (மே 3) நடக்கிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலைநாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 960 , புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, அண்ணமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்திகிராம பல்கலை, சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் தலா 480 பேர் என 3360 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மையங்களில் இருக்கைகள் போடப்பட்டு பதிவு எண் எழுதும் பணி மே 2 நடந்தது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை சோதனை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேர்வு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்