அப்துல்கலாம் எழுதிய 700 நூல்கள் விற்பனை
கோவை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், 85 வது பிறந்த நாளை முன்னிட்டு, விஜயா பதிப்பகத்தில், சிறப்பு புத்தக கண்காட்சி நேற்று நடந்தது. இதில், அப்துல்கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள், இந்தியா - 2020, எனது பயணங்கள் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் நுால்கள் தனி ஸ்டாலில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பங்கேற்று கலாமின் நுால்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இக்கண்காட்சியில், அப்துல்கலாம் எழுதிய, நுால்கள் மட்டும், 700 பிரதிகள் விற்பனையாகின. அவரது அக்னிச் சிறகுகள் மற்றும் எனது பயணங்கள் ஆகிய இரண்டு நுால்களும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாயின.