உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு தேர்ச்சியை 90லிருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அமைச்சர் உத்தரவு

சென்னையில் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "அடுத்தாண்டு நடக்கும் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மாநில அளவில் 90ல் இருந்து 95 ஆக உயர்த்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தலைமையாசிரியர்கள் மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளது. 6,7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் எழுதும் திறன், பேசும் திறன், அடிப்படை கணிதத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்