உள்ளூர் செய்திகள்

டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் டாக்டர் மதியழகன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் செந்தில்குமார், பொருளாளர் டாக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர் சுகாதார அலுவலரை பணிநீக்கம் செய்தல், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், மகப்பேறு மருத்துவர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்