முதல்வர் பேசுகிறேன்!
அசுத்த நீர் கொண்ட குவளையி னுள் தொடர்ந்து நன்னீர் ஊற்றப்படுமானால், ஒருகட்டத்தில் குவளை நீர் நன்னீராகி விடும். இங்கு, குவளை என்பது நம் சமூகம்; மாணவ மாண வியரே நன்னீர்! - இவ்வுண்மை யில் அதீத நம்பிக்கை கொண்டுள்ள நான் ச.செல்வகுமாரி; பெரம்பூர், சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை.மனம் மாற்றிய கணம்ஆங்கில ஆசிரியையா 1993ல் அரசுப்பள்ளியில நான் சேர்ந்த நேரம் அது; அரசு வேலை வேண்டாம்&'னு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம். அந்தசமயத்துல, மாணவர்களுக்குள்ளே சண்டை. விசாரிச்சப்போ, பள்ளியோட சூழலும் குடும்ப பின்னணியும் வன்முறைக்கு காரணம்னு தெரிஞ்சது. ராஜினாமா முடிவை கைவிட்டேன். இப்போ, உதவி கல்வி அலுவலர் பணிவாய்ப்பை தவிர்க்கிற அளவுக்கு இந்த பணி மீது ஈர்ப்பு!தலைமுறை முக்கியம்என் மகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஒரு கடையில வேலை வருது; அவ சம்பாதிச்சிட்டா பல பிரச்னைகள் தீர்ந்திடும்; அவளையும் கரை சேர்த்திடுவேன்னு சொல்ற பல பெற்றோர்கிட்டே நான் கேட்குற ஒரே கேள்வி... உங்களுக்கு தற்காலிக தீர்வு வேணுமா... இல்ல, உங்க தலைமுறையோட தலையெழுத்து மாறணுமா?அறிவுக்கு அழிவுபுத்தகத்துல இருக்குறதை சத்தமா வாசிச்சு மனசுல பதிய வைச்சு எழுதிப் பார்க்குற தலைமுறை இப்போ இல்லை. டிவி பார்த்துக்கிட்டோ, ஹெட்செட் மாட்டிக்கிட்டோ புத்தகத்தை பார்த்து எழுதுறாங்க! இப்படி கவனம் சிதற படிக்கிறதால என்ன பலன்; இந்த அறிவுரையை என் மாணவர்கள் மனசுல அடிக்கடி நான் விதைச் சிட்டு வர்றேன்!600 குடும்பங்கள்ஒவ்வொரு கல்வி ஆண்டும் எங்க பள்ளியில இருந்து 600 மாணவியர் படிப்பை முடிச்சுட்டு போறாங்க. நாம விடை கொடுத்து அனுப்புறது 600 மாணவியருக்கு இல்லை... 600 குடும்ப நிர்வாகிகளுக்குங்கிற புரிதல் என் பள்ளியில இருக்குற அத்தனை ஆசிரியர்களுக்கும் உண்டு; இந்த புரிதல்தான் எங்க பொறுப்புக்கான சான்று!2,258 மரங்கள்ஆண்டுக்கு ஒரு திட்டம்னு எங்க 2,258 மாணவியரும் செயல்படுத்திட்டு வர்றாங்க! கடந்தாண்டு, விதைப்பந்துகளை துாவணும்னு என் மாணவியருக்கு அறிவுறுத்தினேன்; 2021ல், மற்றவருக்கு கல்வி புகட்டுங்கள்னு சொன்னேன். மரக்கன்றுகள் நட வேண்டும்னு இந்த கல்வியாண்டுல சொல்லியிருக்கேன்!முகங்கள் ஆயிரம்ஆசிரியருக்கு ஒரு முகம், பெற்றோருக்கு ஒரு முகம், நண்பர்கள் மத்தியில ஒரு முகம்னு சூழலுக்கு தகுந்தபடி மாணவர்கள் நடந்துக்குவாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். தவறுகளை முயற்சி பண்ணிப் பார்க்க விரும்புற அவங்க வயசை சரியா புரிஞ்சு வழிநடத்துற வழிகாட்டி நான்.