பெண்களுக்கானஅழகுக்கலை பயிற்சி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கத் துறை சார்பில் மூன்று மாதம் பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி, ஓராண்டு எலக்ட்ரீசியன் சுயவேலைவாய்ப்பு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் டிச. 5ல் துவங்குகிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாத, அதற்கும் மேல் படித்தவர்கள் சேரலாம். நேரடி சேர்க்கை, முன்னுரிமை பெற 0452 - 253 7838 ல் தொடர்புகொள்ளலாம். பயிற்சி நேரம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.