மாணவர்களிடம் கலந்துரையாடல்
சிவகங்கை: காளையார்கோவிலில் காணொளி மூலம் முதன் முறையாக வாக்களிக்கும் கல்லுாரி மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்நிகழ்வில் பா.ஜ., பாராளுமன்ற பொறுப்பாளர் அர்ஜூனமூர்த்தி, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் மார்த்தாண்டன், இணை ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரி, பார்வையாளர் சிதம்பரம், இளைஞர் அணி துணை தலைவர் கவுதம், செயலாளர் அஜித் கிருஷ்ணன், மண்டல தலைவர்கள் லோகு, நாட்டரசன், நகர தலைவர் உதயா கலந்து கொண்டனர்.