குழந்தைகள் பார்லிமென்ட்
மதுரை: மதுரை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எச்.சி.எல்., ஆபர் நிறுவனம் சார்பில் எனது பள்ளி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பார்லிமென்ட் நடந்தது.சென்னை மாநகராட்சி அரசு பெண்கள் மாதிரி, ஆவடி மறைமலை அடிகளார், மதுரை என்.எம்.எஸ்.எம்., பெண்கள், நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள், பாரதியார் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு பெற்றன. முதல் இடத்தை ஆவடி மாதிரி பெண்கள் பள்ளி, 2ம் இடத்தை மதுரை கஸ்துாரிபாய்காந்தி பெண்கள் பள்ளி, 3வது இடத்தை மதுரை என். எம். எஸ்.எம்., பள்ளி பெற்றன.பரிசளிப்பு விழா மதுரை வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் ஐயர் தலைமை வகித்தார். மேயர் இந்திராணி பொன்வசந்த் பரிசு வழங்கினார். கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அதிகாரி மாரிமுத்து, காமராஜ் பல்கலை பேராசிரியர் பாரி பரமேஸ்வரன், திட்டப் பொறுப்பாளர்கள் பத்மநாதன், அமர்நாத், ஈஸ்வரன் பங்கேற்றனர்.