மாணவர்கள் இடைநிற்றல்
விருதுநகர்: விருதுநகர் அருகே பாண்டியன் நகர், தாதம்பட்டியில் இடைநின்றமாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் பெற்றேர்களை சந்தித்து, காரணங்கள், குறைகளை கேட்டறிந்து கள ஆய்வை கலெக்டர் ஜெயசீலன் மேற்கொண்டார்.மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் 80 அரசு அலுவலர்கள் 10 முதல் 15 மாணவர்கள் வரை 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று இடைநின்ற 800 மாணவர்களை நேரில் சந்தித்து இடை நிற்றலுக்கான காரணத்தை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வுகளை செய்தனர்.