படைப்பாற்றலே முக்கியம்
கல்வி என்பது பாடத்திட்டத்தை விட படைப்பாற்றலால் இயக்கப்பட வேண்டும். இளைஞர்களின் படைப்பாற்றல் திறனை வளர்ப்பதாகவும், மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்திற்கான முக்கிய நெம்புகோலாகவும் கல்வி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களும் மற்ற சமூக நிறுவனங்களும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.சமீபத்தில் ஜம்முவில், ‘கல்வி நிர்வாகிகளின் தலைமை மேம்பாடு&' குறித்த மூன்று நாள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்து பேசிய லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, நமது மாணவர்களுக்கு சிறந்த பாடத்திட்டத்தை வழங்கவும், உலகின் சிறந்தவற்றுடன் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்கவும், உயர்கல்வியை சீர்திருத்தவும், சீரமைக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.