லேப்டாப் வினியோகம்
உடுமலை: உடுமலை வட்டார அரசு பள்ளிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டன.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.உடுமலை வட்டாரத்தில் ஊராட்சி, நகராட்சி உட்பட மொத்தமாக, 118 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அரசுப்பள்ளிகளில், தொழில்நுட்ப வகையிலும் மேம்படுத்துவதற்கு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.இதன் அடிப்படையில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு லேப்டாப்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கப்படுகின்றன. உடுமலை வட்டாரத்தில் உள்ள, 112 பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், கல்வித்துறையின் சார்பில் லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறனும், கல்வி மேம்படையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.