உள்ளூர் செய்திகள்

புத்தகங்கள் உறுதுணை

தாராபுரம்: அரசு கலைக்கல்லுாரி, முதலாம் ஆண்டு வழிகாட்டி பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்தலைவர் சீத்தாராமன் வரவேற்றார்.தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன் பேசுகையில், சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்; ஒழுக்கம், வாழ்க்கை சிறக்க உதவும். போதைப் பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.வாழ்வில் சிறப்பான இடத்தை அடைய புத்தக வாசிப்பு உறுதுணையாக இருக்கும்; போட்டி தேர்வுக்கும் உதவும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்