யுனெஸ்கோ பரிசு!
'ஸ்டெம்' துறைகளில் சிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கான 'யுனெஸ்கோ-அல் போசன் சர்வதேச விருது' வழங்கப்படுகிறது.முக்கியத்துவம்அல் போசன் அறக்கட்டளையுடன் இணைந்து யுனெஸ்கோவால் நிறுவப்பட்ட இந்த விருது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் சாதனைபுரியும் இளம் விஞ்ஞானிகளை அங்கீகரிக்கிறது. ஆராய்ச்சி, கல்வி மற்றும் விஞ்ஞான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விருது, சமூக-பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது.தகுதிகள்ஆப்பிரிக்கா, அரபு நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஆசியா மற்றும் பசிபிக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 வயதிற்குட்பட்ட 'ஸ்டெம்' துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் விண்ணப்பிக்கலாம். பயன்கள்தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழுடன் தலா 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் சவால்களுக்கு புதுமையான தீர்வை வழங்கும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதோடு, தொடர்ந்து தீவிரமாக செயல்படுவதற்கும், உலகப் பொருளாதாரத்தில் பங்களிப்பதற்குமான அங்கீகாரத்தை வழங்குகிறது. விண்ணப்பிக்கும் முறை: யுனெஸ்கோ உடனான ஒத்துழைப்புக்கான இந்திய தேசிய ஆணையத்தின் வாயிலாக பிப்ரவரி 15, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து, https://apply.unescoalfozanprize.org/login எனும் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 15, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: 'ஸ்டெம்' துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து புகழ்பெற்ற உறுப்பினர்களை சர்வதேச அளவிலான நடுவர் மன்றம் கொண்டுள்ளது. அத்தகைய நடுவர் மன்றமே பரிசுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.விபரங்களுக்கு: https://unescoalfozanprize.org/