உள்ளூர் செய்திகள்

தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில், மார்ச் மற்றும் ஏப்ரல் 2025ல் நடைபெற உள்ள 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், 10ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் அறிவியல் பாட செயல்முறை தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்கள் குறித்த தகவல்கள் https://www.dge.tn.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.10ம் வகுப்பு செயல்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சேவை மையங்களில் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: எழுத்துத்தேர்வு - டிசம்பர் 1510ம் வகுப்பு செயல்முறை தேர்வு - டிசம்பர் 17விபரங்களுக்கு: www.dge.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்