உள்ளூர் செய்திகள்

தைவான் உதவித்தொகை

சிறந்த மாணவர்களுக்கு தைவான் கல்வி நிறுவனங்களில் முழு உதவித்தொகையுடன் உயர்கல்வி வழங்கும் வகையில், தைவான் ஐ.சி.டி.எப்., சர்வதேச உயர்கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தைவானில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கடந்த 1998 முதல் வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டத்தில், இந்தாண்டில் மட்டும் 29 படிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.உதவித்தொகை விபரம்:கல்விக் கட்டணம், காப்பீடு, விமானக் கட்டணம், பாடப்புத்தகங்கள், தங்குமிடம் மற்றும் இதர மாதாந்திர செலவீனங்கள் அனைத்தும் இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.படிப்புகள்:பிஎச்.டி.,: வேளாண்மை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் முதுநிலை படிப்புகள்: வேளாண்மை, வணிகம் மற்றும் மேலாண்மை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், பொறியியல் மற்றும் அறிவியல், கல்வி.கல்வி நிறுவனங்கள்: தேசிய பிங்டங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்தேசிய யாங் மிங் சியாவ் துங் பல்கலைக்கழகம் தைபே மருத்துவ பல்கலைக்கழகம்தேசிய தைவான் ஓசன் பல்கலைக்கழகம்தேசிய சுங் ஹெசிங் பல்கலைக்கழகம்தேசிய செஞ்சி பல்கலைக்கழகம்தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம்தேசிய தைவான் நார்மல் பல்கலைக்கழகம்மிங் சுவான் பல்கலைக்கழகம்தேசிய கவொசுங் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா பல்கலைக்கழகம் தேசிய சென்ட்ரல் பல்கலைக்கழகம்குன் ஷான் பல்கலைக்கழகம்யுவான் ஸீ பல்கலைக்கழகம்தேசிய செங் குங் பல்கலைக்கழகம்தேசிய டோங் ஹ்வா பல்கலைக்கழகம்விண்ணப்பிக்கும் முறை: https://web.icdf.org.tw/ICDF_TSP/WelcomeStart.aspx எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 15விபரங்களுக்கு: www.icdf.org.tw


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்