உள்ளூர் செய்திகள்

மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை, நலவாழ்வு சங்கத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் 3, ஹோமியோபதி மருத்துவர் 1, பல்நோக்கு பணியாளர்கள் 4, சிகிச்சை உதவியாளர் 4, ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.14 மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் - 626 001 என்ற முகவரிக்கு நேரிலோ, விரைவு தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்