உள்ளூர் செய்திகள்

சர்வதேச கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.கல்லூரியின் ஐ.க்யு.ஏ.சி., ரிசர்வ் கமிட்டி சார்பாக மாணவர்கள் சர்வதேச விருந்தினர் விரிவுரை கூட்டம் 'ஆராய்ச்சி பாதைகள்' என்ற தலைப்பில் நடந்தது. மாணவர்களின் நலனுக்காக அவர்களின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரி செயலர் ஆசைத்தம்பி, தலைவர் மயில்ராஜன், முதல்வர் ராதா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் இளமதி வரவேற்றார். அமெரிக்கா நியூ யார்க் பல்கலை பெலோ அல்பானி, சதீஷ், இந்தோனேசியா குவாலா பல்கலைக்கழக பெலோசியா, செல்லப்பாண்டி பேசினர்.உதவி பேராசிரியர் திருவேணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்