வேலைவாய்ப்பு முகாம்
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தொழில் வழிகாட்டல், வேலை வாய்ப்பு மையம், ஐ.சி.டி., அகாடமி, மேஜிக் பஸ் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். இறுதி ஆண்டு படிக்கும் 274 மாணவர்களுக்கு வங்கிகள், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கினர். பேராசிரியர்கள் நாராயணமூர்த்தி, சங்கரநாராயணன், ஆதிபெருமாள்சாமி, பரிமளா ஒருங்கிணைத்தனர்.