உள்ளூர் செய்திகள்

ஆய்வகம் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதிய ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினார். ஆய்வகத்தை திறந்து வைத்து துணை தலைவர் சசி ஆனந்த் பேசினார். ஆய்வகத்தின் ஒரு ஆண்டு திட்டம் குறித்து இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகர் பேசினர்.விழாவில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முரளி, கோட்டைமலை, முனீஸ்வரன், ரமேஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்