ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு
இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான சி.பி.எஸ்.இ., நடத்தும் "ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு&' வரும் 2011, ஏப்., 24ம் தேதி நடைபெறுகிறது. கடந்த வருடம் உலகிலேயே அதிகபட்சமாக 12 லட்சம் பேர் இத்தேர்வில் கலந்து கொண்டனர். இந்தாண்டு முதன்முதலாக ஆன்லைன் மூலமாகவும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., நிகர்நிலைப் பல்கலைக்கழங்கள் மற்றும் சில மாநில பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இளநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான அட்மிஷன், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே நடைபெறுகிறது. பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த வருடம் "முதன்முதலாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை&' என்ற அடிப்படையில் நாட்டிலுள்ள 20 நகரங்களில் இருந்து தலா 5000 மாணவர்கள் வீதம் முதலில் விண்ணப்பிக்கும் ஒரு லட்சம் பேருக்கு மட்டும் ஆன்லைன் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கம்போல எழுத்துதேர்வாகவும், நாட்டின் 84 நகரங்களில் நடைபெறும். www.aieee.nic.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் நவ., 23ம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன.