பிளஸ் 1 தேர்வு முடிவுகள் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்
உடுமலை : பிளஸ் 1 பொதுத்தேர்வில், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வருமாறு:பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி - 98 சதவீதம், தேவனுார்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி - 97, உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 93, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 97.மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி - 97, ராமசந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி - 96, வாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி - 96, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி - 96, புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி - 95.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மற்றும் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி - 94, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி - 93, பூலாங்கிணர் மற்றும் எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி - 92, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி - 91.உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி - 90, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி - 90, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 87, கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி - 85, உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி 74 சதவீதமும் பெற்றுள்ளன.