உள்ளூர் செய்திகள்

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

கோவை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 74 பணியிடங்களுக்கு, நவ., 8ல் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு, விண்ணப்பித்துள்ளோர், தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அங்கு செயல்படும், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், சிறந்த வல்லுனர்களை கொண்டு, ஆக., 31முதல் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள மனுதாரர்கள், குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன், ஆக., 31க்குள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் வாயிலாகவோ பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.இப்பயிற்சி, ஆக., 31 முதல், நவ., 7 வரை (திங்கள் முதல் வெள்ளி, மாலை 3:00 -- 6:00 மணி) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்