பிளஸ் 1 அரியர் பொதுத்தேர்வு துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 'அரியர்' பொதுத்தேர்வு தொடங்கியது.2025ம் ஆண்டுடன் பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த கல்வியாண்டில் தோல்வி அடைந்தவர்களுக்கு அரியர் பொதுத்தேர்வு நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது.372 மாணவர்கள் 76 மையங்களில் தேர்வெழுதினர். 6 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்கும்.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்ட்டன.18 வழித்தட அலுவலர்கள், 76 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 76 துறை அலுவலர்கள், நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க கண்காணித்தனர்.