உள்ளூர் செய்திகள்

குரூப் 1 தேர்வு: இலவச பயிற்சி

சிவகங்கை: சிவகங்கையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 3ம் தேதி முதல் துவங்குகிறது.சிவகங்கை வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 3ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.இப்பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு 94449 25890 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்