முதல் 10 இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள்
2010ஆம் ஆண்டில் உலக அளவில் சிறந்த 10 இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரம், கல்வி நிறுவனத்தின் தனிச்சிறப்பு, சர்வதேச அளவில் மாணவர்கள் தங்கி படிக்கும் வசதி, புதுமையான பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. 1. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன்2. ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா3. யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா4. யு.சி.எல்.,(லண்டன் பல்கலைக்கழகம்), பிரிட்டன்5. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அமெரிக்கா6. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிட்டன்7. லண்டன் இம்பீரியல் கல்லூரி, பிரிட்டன்8. சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா9. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அமெரிக்கா10. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா நம் நாட்டில் மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 187 வது இடத்திலும், டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 202 வது இடத்திலும் உள்ளன.