உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்ச்சி அதிகரிப்பு: 113 தனியார் பள்ளிகள் சென்டம்

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.90 சதவீத தனியார் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டன. இருப்பினும், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்கள் இன்னும் தமிழக அரசின் பாட திட்டத்தின் கீழ் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி வருகின்றனர். தமிழக அரசின் பாடத்திட்டத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியானது. நேற்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின. தனியார் பள்ளி மாணவர்கள் மதிப்பெண்ணை குவித்துள்ளனர்.96.90 சதவீதம் தேர்ச்சிபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த 4,290 மாணவர்கள், 3,977 மாணவிகள் என மொத்தம் 8,267 தனியார் பள்ளி மாணவர்கள் எழுதினர். இவர்களில் 4,109 மாணவர்கள், 3,902 மாணவிகள் என, 8,011 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களின் தேர்ச்சி 95.78 சதவீதம், மாணவிகளின் தேர்ச்சி 98.11 சதவீதம் என சராசரியாக 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தனியார் பள்ளிகள் 96.60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த சூழ்நிலையில் இந்தாண்டு 0.30 சதவீதம் அதிகரித்துள்ளது.புதுச்சேரி பிராந்தியம்புதுச்சேரி பிராந்தியத்தில் 3,814 மாணவர்கள், 3,437 மாணவிகள் என மொத்தம் 7,251 பேர் எழுதினர். இதில் 3,674 மாணவர்கள், 3,386 மாணவிகள் என 7,060 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதி மாணவர்களில் 96.33 சதவீத மாணவர்களும், 98.52 சதவீதம் மாணவிகள் என ஒட்டுமொத்தமாக புதுச்சேரி பிராந்தியத்தில் 97.37 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு தனியார் பள்ளிகள் 97.05 தேர்ச்சி பெற்றிருந்த சூழ்நிலையில் இந்தாண்டு 0.32 சதவீதம் தேர்ச்சி புதுச்சேரி பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது.காரைக்கால் பிராந்தியம்இந்த பிராந்தியத்தில் 476 மாணவர்கள், 540 மாணவிகள் என மொத்தம் 1,016 பேர் பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதினர். இதில் 435 மாணவர்கள், 516 மாணவிகள் என மொத்தம் 951 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் மாணவர்களின் தேர்ச்சி 91.39 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 95.56 சதவீதமாகவும், ஒட்டுமொத்த தேர்ச்சி 93.60 சதவீதமாகவும் உள்ளது. கடந்தாண்டு காரைக்கால் தனியார் பள்ளிகள் 93.42 தேர்ச்சியை எட்டியிருந்த சூழ்நிலையில் இந்தாண்டு 0.18 சதவீதம் அதிகரித்துள்ளது.100 சதவீத தேர்ச்சிபுதுச்சேரி, காரைக்காலில் 180 தனியார் பள்ளிகள் உள்ள சூழ்நிலையில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தன. இந்தாண்டு மொத்தம் 113 தனியார் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் 95 பள்ளிகளும், காரைக்காலில் 18 பள்ளிகள் இந்தாண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.சறுக்கிய சென்டம்கடந்தாண்டு பாட ரீதியாக 531 தனியார் பள்ளி மாணவர்கள் பல்வேறு பாடங்களில் சென்டம் எடுத்து இருந்தனர். இந்தாண்டு இது சறுக்கியுள்ளது. பிரெஞ்சு பாடத்தில்- 24, ஆங்கிலம்-4, கணிதம்-9, அறிவியல்-132, சமூக அறிவியல்-151 என 320 மாணவர்கள் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்ணை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்