உள்ளூர் செய்திகள்

ஜன., 10ல் நிப்ட் நுழைவுத்தேர்வு

சென்னை: 'தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான, 'நிப்ட்' நுழைவுத்தேர்வு, அடுத்தாண்டு ஜனவரி 10ல் நடக்கும்' என, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.மத்திய ஜவுளி துறையின் கீழ், ஆடை வடிவமைப்பு தொழில் படிப்புக்காக, தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில், பேஷன் தொழில்நுட்பம் சார்ந்து இளநிலை, முதுநிலை மற்றும் பி.எச்.டி., வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை, நிப்ட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடக்கிறது.வரும், 2027 - 28ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நிப்ட் நுழைவுத்தேர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி நடக்கிறது. இதற்கு, https://nta.ac.in என்ற இணையதளம் வழியாக, நவம்பர் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள, நவ., 22 முதல் 25 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும், தேர்வுக்கான அனுமதி சீட்டு, ஜன., 4ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்