உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு:13 பேர் தேர்ச்சி

கம்பம்: டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வில் தேனி மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 13 கால்நடை டாக்டர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கால்நடை பராமரிப்பு துறையில் 2012 ல் 747 கால்நடை டாக்டர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். 12 ஆண்டுகளாக பணியாற்றிய இவர்களில் 291 பேர் பணியை நிரந்தரம் செய்யாததால் ராஜினாமா செய்து விட்டனர். மீதமுள்ள 454 டாக்டர்கள் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச்சில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்போது பணியாற்றி வரும் 454 டாக்டர்களின் பணியிடங்களையும், காலிப் பணியிடங்களாக அறிவித்துள்ளது.இதனால் 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கால்நடை டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதுமாறும், 50 மதிப்பெண் கருணை (கிரேஸ்) மதிப்பெண்களாக வழங்கப்படும் என கால்நடைத்துறை இயக்குனரகம் தெரிவித்தது. இதை கண்டித்து கால்நடை டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வேறுவழியின்றி கடந்த மாதம் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 13 டாக்டர்களும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் பலர் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. கால்நடை டாக்டர்கள் கூறுகையில், தேர்ச்சி பெற்றாலும் இனி நேர்முக தேர்வுக்கு 3:1 என்ற அடிப்படையில் அழைத்துள்ளனர். அதில் என்ன செய்யப் போகின்றனர் என்பது தெரியவில்லை என்று புலம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்