உள்ளூர் செய்திகள்

 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை யு.இ., நியமனம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் 15 ஆண்டுகளுக்கு பின் பல்கலை பொறியாளராக (யு.இ.,) பொதுப்பணித் துறையை சேர்ந்த நிர்வாக பொறியாளர் நீலகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலை வளாகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டடப் பணிகள், மராமத்து, வளாக மேம்பாட்டு பணிகளை கண்காணிக்க பொதுப் பணித்துறை பொறியாளர்கள் யு.இ.,யாக அயல் பணியில் நியமிக்கப்பட்டனர்.இப்பதவி 15 ஆண்டுகளாக காலியாக இருந்தது. பல்கலை நியமித்த உதவி பொறியாளர் கூடுதலாக இப்பொறுப்பை கவனித்தார். தற்போது மீண்டும் பொதுப்பணித்துறை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்