உள்ளூர் செய்திகள்

என்.பி.ஆர்.,ல் 17வது பட்டமளிப்பு விழா

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா நடந்தது.என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன் வரவேற்றார். என்.பி.ஆர்., கல்விக்குழும இயக்குநர் ஆனந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஐ.ஆர்.எஸ்., முதன்மை வருமான வரி ஆணையர் வசந்தன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:“இக்கால இளைஞர்கள் புதிய விஞ்ஞானத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றனர். கல்வி என்பது ஒவ்வொரு மாணவருக்கும் முக்கியமான ஒன்று. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதன் மூலம் வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய வேண்டும். சமூகத்தில் பெண்கள் பட்டம் பெறுவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான ஒன்றாகும். தற்போதைய தொழில்துறையின் தேவையாக இருக்கும்” என்றார். 703 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்