ஜுலை 18ல் 2527 பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர்
ஜுலை 18ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்விற்கு 3174 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 640 மாணவர்கள் வரவில்லை. வந்தவர்களில் 7 மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர். மீதமுள்ள 2527 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதற்கான ஆணையைப் பெற்றுக் கொண்டனர். ஜுலை 8ம் தேதி முதல் நடைபெற்று வரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வில் நேற்றுத்தான் வராதோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதுவரை 583 மாணவர்கள் வராததே அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று சுமார் 640 மாணவர்கள் வரவில்லை. இது 20.16 விழுக்காடாகும். கடந்த 11 நாட்களில் 20 விழுக்காடு நேற்றுத்தான் பதிவாகியுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் மொத்தமாக இதுவரை 26,588 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.