உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வை நடத்த பட்டதாரி ஆசிரியர் கோரிக்கை

தேனி: &'&'பிளஸ் 2 பொதுத்தேர்வை போதிய பாதுகாப்புடன் அரசு நடத்த வேண்டும்&'&' என பட்டதாரி ஆசிரியர் கழக பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:மாநில அரசின் பாடத்திட்டத்தில் பள்ளி தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லுாரி சேர்க்கை நடக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்து ஒருமாத முன்அறிவிப்போடு பிளஸ் 2 தேர்வு நடத்த வேண்டும்.வலுவான பள்ளி கட்டமைப்பு உள்ளதால் மாணவர்கள் பயிற்சியை தொடரும் வகையில், அரசு பள்ளிகளை தேர்வு மையங்களாக அறிவித்து தேர்வு நடத்த வேண்டும். நோய் பாதித்த மாணவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தலாம். தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்