உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் ஊனமுற்ற மாணவர்களுக்கு சலுகை

கண்பார்வையில்லாத மாணவர்களுக்கு, தேர்வில் சொல்வதை எழுதுபவர்கள் (ஸ்கிரைப்) அரசு செலவில் வழங்கப்படுவார்கள். விபத்துகளால் உடல் ஊனமுற்று தேர்வு எழுதஇயலாதோர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கை முறிவால் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு ஸ்கிரைப் சலுகை வழங்கப்படும். இதற்கான செலவை சம்பந்தப்பட்ட மாணவர்களே ஏற்க வேண்டும். காது கேளாத, வாய்பேசாத மாணவர்களுக்கு பகுதி 1 மொழிப்பாடம் அல்லது பகுதி 2 மொழிப்பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மனநலம் குன்றிய மாணவர்களுக்கும் மொழிப்பாடத் தேர்வுகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். டிஸ்லெக்சியா குறைபாடு மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் சான்றிதழுடன் பாட ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்