உள்ளூர் செய்திகள்

சிபிஎஸ்இ பிளஸ்2 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

2009ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் சிபிஎஸ்இயில் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் மட்டுமே இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ இளநிலை பட்ட வகுப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வீதம் (3 ஆண்டுகளுக்கு) கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முதுநிலைப் பட்ட வகுப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். தொழிற் கல்வி படிக்கும் மாணவர்கள் நான்காவது ஐந்தாவது ஆண்டுகளில் 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். ஆண்டுக்கு பத்து மாதங்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். பிளஸ்2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முறைசார் படிப்புகளில் சேர்ந்து படிப்பவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு: www.cbse.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்