உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொது தேர்வு புதுச்சேரியிலும் ரத்து

புதுச்சேரி: தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கு, தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தமிழக பாடத் திட்டமும், ஏனாமிற்கு ஆந்திர பாடத் திட்டம், மாகிக்கு கேரள பாடத் திட்டம் பின்பற்றப்படுகிறது. இதனால், அந்தந்த மாநில கல்வித்துறை எடுக்கும் முடிவுகளையே, புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையில் தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசு இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, 5ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்