பிளஸ் 2 முடித்தோருக்கு இன்று மார்க் சீட்
தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக, ஆன்லைன் வழியில் மதிப்பெண் விபரம் வழங்கப்பட்டது. பின், பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அதற்கான பணிகள் முடிந்து, திருத்திய மதிப்பெண் வழங்கப்பட்டது. துணை தேர்வும் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.இதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களுக்கும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்த சான்றிதழ்கள், இன்று முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. பள்ளிகளில் படிக்காமல் தனித்தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்று கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.