குரூப் 2ஏ தரவரிசை மார்ச் மாதம் வெளியீடு
அரசு துறைகளில், 6,151 காலியிடங்களை நிரப்ப, குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தகுதி தேர்வு, 2022ம் ஆண்டு மே 21ல் நடந்தது. அதில், 51,987 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்., 25ல் பிரதான தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள், இம்மாதம், 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.முதல் கட்டமாக, 161 காலியிடங்களுக்கு நேர்முக தேர்வு, கடந்த வாரம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 5,900 இடங்களுக்கு விரைவில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில், குரூப் 2 பதவிகளுக்கு, நேர்முக தேர்வு முடிந்து விட்டது. குரூப் 2 ஏ பதவிகளில் நேர்முக தேர்வு அல்லாத இடங்களுக்கான தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல், மார்ச் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.