உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 விடைத் தாள்கள் விரைவில் திருத்தம்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள்கள் விரைவில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த பிறகு 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடக்கும். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், பிளஸ் 2 தேர்வுகள் இறுதிக் கட்டத்தை நெருங்கும் முன்பாக மொழிப் படங்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மற்றப் பாடப் பிரிவு விடைத்தாள்களை விட மொழிப் படங்களின் விடைத்தாள்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் அவற்றைத் திருத்த அதிக கால அவகாசம் பிடிக்கும் என்பதால், மொழிப் பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி விரைவில் துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்