குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை கழக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் இதர போட்டி தேர்வுக்கு தயார் செய்து ண்டிருப்பவர்களுக்கு சனி, ஞாயிறு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான (நேர்முகத்தேர்வு இன்றி) போட்டி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 1863. எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11. போட்டி தேர்வில் வெற்றி பெற்ற வல்லுனர்கள் மூலம், சிறப்பு பயிற்சி, மாதிரி தேர்வு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கல்வியல் கல்லூரி வளாக கருத்தரங்க அறையில் நடக்கும், பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம், என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்தார்.