பிளஸ் 2 ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: ஜூன் / ஜூலை மாதங்களில் நடைபெறும் தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று (ஜூன் 19) பிற்பகல் முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள HALL TICKET என்பதைக் கிளிக் செய்து, பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.துணைத் தேர்வுக்கான தேர்வுக்கால அட்டவணையும் இதே இணையதளத்தில் காணலாம்.