உள்ளூர் செய்திகள்

குரூப் 2, 2ஏ தேர்வில் தமிழ், கணித கேள்விகள் ஈசி

கோவை: சார் பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி உள்ளிட்ட 14 வகையான குரூப் 2 பதவிகளுக்கும், மூத்த வருவாய் ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட 44 வகையான குரூப் 2 ஏ பதவிகளுக்கும், முதல்நிலைத் தேர்வு நடந்தது. 846 காலியிடங்கள் காட்டப்பட்டுள்ளன.கோவையில் இத்தேர்வு எழுத 20,980 பேர் எழுத விண்ணப்பித்தனர். 73 மையங்களில் காலை 9:30 மணியில் இருந்து மதியம் 12:30 வரை தேர்வு நடந்தது. காலை 7:00 மணி முதலே தேர்வர்கள் வர துவங்கினர். ஹால்டிக்கெட், பேனா, அடையாள அட்டை மட்டுமே தேர்வறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.15,272 பேர் இத்தேர்வு எழுதினர். 5,708 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ், கணித பாடங்களில் கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், பொது அறிவுப்பகுதியில் புதிய திட்டங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்படவில்லை எனவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.அப்ஜெக்டிவ் வகை கேள்விகளை விட, கூற்று, காரணம் வகை கேள்விகளே அதிகம் இடம்பெற்றதால், புரிந்து படித்தவர்களே அதிக மதிப்பெண் பெற முடியும் என, தேர்வு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். இதில் வெற்றி பெறுவோர், முதன்மை தேர்வு எழுத தகுதி பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்