உள்ளூர் செய்திகள்

மே 20 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

கரூர்: கரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும், 20 முதல் டி.என்.பி.எஸ் சி., தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கப்படும் என, கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் வெண்ணைமலையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர்தேர்வாணையத்தால் குரூப் 2, குரூப் 4 போட்டி தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 20 முதல் தொடங்கப்படவுள்ளது. இப்போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது.ஸ்மார்ட் போர்டு, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சிகால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள், வாராந்திர தேர்வு, இணைய வழித்தேர்வு, முழு மாதிரி தேர்வு, மென்பாட குறிப்புகள் எடுத்துக் கொள்ள இணைய தளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பங்கேற்க விரும்புவோர், அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 63743 19939, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்