உள்ளூர் செய்திகள்

ஜி 20 மாநாடு: ஜொலிக்குது டில்லி

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிச., 1ல் இந்தியா ஏற்றது. 2023 நவ., 30 வரை இப்பொறுப்பில் இருக்கும். இந்தாண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது. இதில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது இந்தாண்டு மையக்கருத்து.எப்படி உருவானது1990களில் ஆசிய அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அது உலகம் முழுவதும் பொருளாதார தேக்கத்தை உருவாக்கியது. இதனால் துவங்கப்பட்டது தான் ஜி 20 கூட்டமைப்பு. வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்புடன் (ஜி 7), வளரும் நாடுகள் சேர்ந்து ஜி 20 உருவானது. ஜி 20 அமைப்பு 1999 செப்., 26ல் துவங்கப்பட்டது. இதில் 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. துவக்கத்தில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள் சந்தித்து உலக பொருளாதாரம், நிதி நெருக்கடி குறித்து விவாதித்தனர். 2008ல் இருந்து ஜி 20 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் சந்திக்கத் தொடங்கினர்.85 சதவீதம்சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம், உலக வர்த்தகத்தில் 75 சதவீதம், உலக மக்கள் தொகையில் 66 சதவீதம், நிலப்பரப்பில் 70 சதவீதம் இந்நாடுகளில் இருப்பதால், உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக உள்ளது.எந்தெந்த நாடுகள்1. அர்ஜென்டினா2. ஆஸ்திரேலியா3. பிரேசில்4. கனடா5. சீனா6. பிரான்ஸ்7. ஜெர்மனி8. இந்தியா9. இந்தோனேஷியா10. இத்தாலி11. தென்கொரியா12. ஜப்பான்13. மெக்சிகோ14. ரஷ்யா15. சவுதி16. தென் ஆப்ரிக்கா17. துருக்கி18. பிரிட்டன்19. அமெரிக்கா20. ஐரோப்பிய யூனியன்இது தவிர இம்முறை சிறப்பு விருந்தினராக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐ.நா., சபை, சர்வதேச நிதியம், உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம், உலக தொழிலாளர் ஆணையம், உலக வங்கி, ஆப்ரிக்க யூனியன், ஏசியான் அமைப்பு பங்கேற்கின்றன.இந்தியாவில் முதல்முறைஇதுவரை 17 மாநாடு நடந்துள்ளது. தற்போது 18வது மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது.ஆண்டு நாடு தலைவர்1. 2008 அமெரிக்கா ஜார்ஜ் புஷ்2. 2009 பிரிட்டன் கார்டன் புரவ்ன்3. 2009 அமெரிக்கா ஒபாமா4. 2010 கனடா ஸ்டீபன் ஹார்பர்5. 2010 தென் கொரியா லீ மியூங்6. 2011 பிரான்ஸ் நிகோலஸ் சர்கோஷி7. 2012 மெக்சிகோ பெலிப் கெய்டெரின்8. 2013 ரஷ்யா புடின்9. 2014 ஆஸ்திரேலியா டோனி அபாட்10. 2015 துருக்கி எர்டோகன்11. 2016 சீனா ஜி ஷின்பிங்12. 2017 ஜெர்மனி ஏஞ்சலா மெர்கல்13. 2018 அர்ஜென்டினா மவுரிகோ மாக்ரி14. 2019 ஜப்பான் ஷின்சோ அபே15. 2020 சவுதி மன்னர் சல்மான்16. 2021 இத்தாலி மரியோ டிராஜி17. 2022 இந்தோனேஷியா ஜோகோ விடோடோ18. 2023 இந்தியா மோடி19. 2024 பிரேசில் லுலா டா சில்வா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்