ஏ.இ.இ.இ., 2021 இறுதிக்கட்ட தேர்வு
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, ஏ.இ.இ.இ., 2021 இறுதிக்கட்ட தேர்வை, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஆகஸ்ட் 3ம் தேதிக்கு நடத்துகிறது. விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஜூலை 28.இதுகுறித்து அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஏ.இ.இ.இ., தேர்வு மூலம் அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தில் சேர்க்கை பெற ஜே.இ.இ., மாணவர்களுக்காகவும் இந்த இறுதிக்கட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த ஏ.இ.இ.இ., தேர்வுகளை எழுதாத மாணவர்கள் மட்டும் இறுதிக்கட்ட தேர்வை எழுத தகுதி பெறுகின்றனர். ஏ.இ.இ.இ., தேர்வுகளை பல முறை எழுதிய மாணவர்களின் சிறந்த மதிப்பெண் ‘நார்மலைசேஷன்’ முறையில் கணக்கிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு நடைமுறைக்கான பதிவு இறுதிக்கட்ட தேர்வு முடிவுடன் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் துவங்கும். மேலும் தகவல்களுக்கு: www.amrita.edu/btech